பசி

பசி
அவன் ஒரு கை வைத்து ஓரமாக சரிந்து படுத்து கொண்டு
நீல வானை பார்த்து நிதானமாக சிரித்துக்கொண்டு இருக்கையில்
சிறியதாக ஒரு யோஜனை. நாம் எதற்காக ஓடி ஓடி உழை கிறோம்
எல்லாம் இந்த பசி தீர தானே.
இந்த சிறிய வயிறு நம்மை எவ்வாறு படாத பாடு படுத்து கிறது.
எத்தனை இன்னல்கள் எத்தனை வசவுகள்.
இந்த பசி மட்டும் இல்லாவிட்டால் நினைப்பதற்கே நன்றாக இருந்தது.
அவன் வானை நோக்கி இறைவா இந்த பசி இல்லாமல் செய்வாயாக என மனம் உருக வேண்டினன்.
இறைவன் இந்த வேண்டுதலுக்கு செவி சாய்க்க எண்ணினார்.
உலகமே பசி இல்லாமல் போக கடவது என்று அவர் நினைக்க அவ்வாறே நடந்தது.
எல்லா ஜீவனும் பசி இன்றி இருக்கும் நிலை உருவானது.
காலை இளம் வெயில் அவன் கண்களை கூச வைக்க
அவன் சோம்பல் முறிக்க கண் விழித்தான்.
ஒரு புதிய உலகத்தை கண்டான். எல்லா ஜீவனும் உறுங்கிக்கொண்டிருந்தன.
ஒரு சலனமும் இல்லாமல் ஒரு ஒலியும் இல்லாமல்
ஒரு அமைதியான ஒரு உலகம்.
ஒரு ரசிக்க முடியாத உலகம்.
யாருக்கும் எதிலும் நாட்டமில்லை.
எழுந்திருக்க கூட ஒரு ஊக்கமில்லை.
அவன் இந்த நிலையை வெறுத்தான்.
எங்கே அந்த ஏசல்கள் எங்கே அந்த வசவுகள்
யாரும் யாரையும் கத்தாமல்,
ஒரு சோர்த்த வாழ்க்கை
இது அல்லவே நாம் நினைத்தது
இறைவ மீண்டும் பசியை கொடு
உலகை ஒலி உள்ளதாக மாற்று....
எனக்கு இந்த அமைதி பயத்தை கொடுக்கிறது
மன மகிழ்சியை அல்ல என்று அவன் வேண்ட....
ஏய் தடிமாடு உதவாகரை என்று அவன் அம்மா
கத்துவது அவனுக்கு கேட்க
புறப்பட்டான் பசி தணிக்க .......

எழுதியவர் : Kayennr (31-Dec-14, 2:38 am)
பார்வை : 255

மேலே