புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஒரு வருட வாழ்க்கையானது
ஒரு நிமிடமாய் கடந்து செல்கிறது...................

சிலருக்கு இன்பத்தையும்
சிலருக்கு துன்பத்தையும்

சிலருக்கு சாதனையாகவும்
சிலருக்கு சோதனையாகவும்

சிலருக்கு பிழைப்பினையும்
சிலருக்கு இழப்பினையும்

ஒரு சேர தந்து விட்டு
ஓய்வெடுக்க செல்கிறது................

கடந்த காலம் தந்த கவலைகளை
கண்ணீரால் கறைத்திடுவோம்
அது தந்த இன்பங்களை நினைவுகளாய்
நெஞ்சில் சுமந்திடுவோம்
எதிர்வரும் வாழ்க்கையை- இறைவன் அருளால்
எதிர்த்து நின்று ஜெயித்திடுவோம்.....

அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....அன்புடன்
நண்பன்.............

எழுதியவர் : ஹுசைன்.த (31-Dec-14, 8:27 pm)
சேர்த்தது : ஜலால் ஹூசைன்
பார்வை : 71

மேலே