கதம்பக் குறும் பா

குறட்டை
அரட்டை அடிக்கிறது
அரைகுறை
வயிறோடு!!.....

வசீகர வார்த்தைகள்
தெம்பையும் தரலாம்!!...
கூடவே
வம்பையும் தரலாம்?!.....

அரையாண்டு விடுமுறை
சந்தோசத்தில்
பள்ளிக் குழந்தையின்
முதுகுப் புற
புத்தகப் பை!!.....

பால் பானை தேடும்
பூனையின் புத்தாண்டு செய்தி
"என் வழி தனி வழி"
யாரும் குறுக்கே வராதீர்கள்?!....

ஆசைகளை
சொல்லிச் சொல்லி
வளர்க்க வேண்டும்!!....
கொஞ்சிக் கொஞ்சி
வளர்க்கும் நம் குழந்தைகளிடம்!!....

மறக்க
மறக்கப் பிறக்கும்
மறதி
போல
மனிதனுக்கு
உறுதி
பிறப்பதில்லை?!......

எழுதியவர் : வைகை அழகரசு (4-Jan-15, 1:39 pm)
பார்வை : 116

மேலே