22 பிறந்த நேரம் சரியில்லை பெருமாளே

ஆராய்ச்சி மணிகட்டி அரசாண்ட மனுநீதி
**** அரசர்கள் காலத்தில் பிறந்தேனா?
** அணைதந்த கரிகாலன் தலைதந்த குமணன்தன்
**** அறிஞர்கள் அவையில்தான் இருந்தேனா?
தேர்தந்த வள்ளல்கள் திறம்பாடிப் பரிசாகச்
**** சீருக்கோர் ஊர்பெற்று மகிழ்ந்தேனா?
** சென்றிட்ட திசையெல்லாம் வென்றிட்ட சோழர்கள்
**** திறமிக்க படையில்வாள் பிடித்தேனா?
பார்போற்றும் சித்தர்கள் புலவர்கள் துறவோர்கள்
**** பக்கத்தில் பணிசெய்து பயின்றேனா?
** பன்னாட்டு வணிகத்தில் அரபுக்கள் யவனர்க்குப்
**** பட்டோடு பவளங்கள் கொடுத்தேனா?
கூர்கெட்ட பொதுமக்கள் குணங்கெட்ட அரசாங்கம்
**** கொட்டந்தான் அடிக்கின்ற திருநாட்டில்
** கொலைகொள்ளை பசிபஞ்சம் கொடும்லஞ்ச ஊழல்கள்
**** குப்பைக்கு நடுவில்நான் பிறந்தேனே!

எழுதியவர் : ராஜமாணிக்கம் (8-Jan-15, 8:57 pm)
சேர்த்தது : டோனி கிறிஸ்டோபர்
பார்வை : 117

மேலே