ஜாதி ஒழி மதம் அழி சாதி- “பொங்கல் கவிதை போட்டி 2015”

மனிதன் என்ற மாங்காய் ஜாதி சாக்கையில்
மதம் என்ற அங்காடியில் நுழைந்து
நல்ல கனிகளும் அழுக
அங்காடியை அழிப்பது அரிது - முடிந்தால்
ஜாதி என்ற மாங்காய் தூக்கி எறியலாம் !!

வாய் பிளந்து வான் நோக்கி காட்டுகிறேன்
தேன் மழை வரும் முன் மத மழை வருக
ஒளிந்துகொள்ள இயலாமல் விழி, வாய் முடிக்கொள்கிறேன்
உயிர் விடுகிறேன் ஜாதி சாயல் அற்று!

வீர வசனம் வாசித்து விட்டு
சாக்கடையில் தீந்தும் ஜாதி மீன் நான் அல்ல
உயிர் போகட்டுமே துள்ளி தரைபடமுயல்கிறேன்!!

விழித்து கொள்ளுங்கள்
விடிந்தது ஜாதி அசிங்கத்தை வாசல் விட்டு விரட்டுங்கள்
நிராயுதபானி ஆகட்டும் மதம் !!

என் விரல்களை வெட்டிவிட்டு - ஒற்றுமை
வீணையை வாசிக்க சொல்கிறது ஜாதி சமுகம்
விரல் வேண்டும் , வீணை வேண்டும்
சமுகத்தை இழக்கிறேன் ஒரு மனதோடு !

பெரியார், காந்தி கொள்கைகளெல்லாம்
தீண்டா நிலையில் இன்றைய வளர்ப்பு - விரைவில்
தீண்டப்பட்டு அன்றுமுதல் புனிதபடட்டும் மனிதன் இனம் !!!
-----------------------------------------------------------------------
இந்த கவிதை என்னால் இயற்ற்றபபட்டது என்று உறுதிமொழி அளிக்கிறேன்

சி. வேலு
சிவாஜி நகர்
போளூர் வட்டம், திருவண்ணாமலை
கைப்பேசி - 7418202364, 8124646512
----------------------------------------------------------------------------------------

எழுதியவர் : வேலு (12-Jan-15, 9:25 am)
சேர்த்தது : வேலு
பார்வை : 446

மேலே