தைப்பொங்கல்

தைப்பொங்கல் வாழ்த்துக்கள்...........
உணவில்லையேல் உயிரில்லை
விவசாயி இல்லையேல் உலகில்லை.
இதை உணர்த்திடும் நாளே .
தமிழர் திருநாள் தைப்பொங்கல்!
.
பூமியில் யாவும் விளைந்திடவே
சுடர்ந்திடும் சூரியன் தான் ஒன்றே.!
எனவே நாங்கள் முற்றத்தில்
பொங்கிடும் வேளை தானிங்கு,
சூரியன் உதயம் கிழக்கினிலே
பொங்கிச்சரித்திடும் பால் அங்கு!
.
மீட்டெடுத்த பால் தனையே
வீட்டின் சுற்றம் தான் தெளிப்போம்.
இந்த ஆண்டின் மகிழ்ச்சியென
வெடிதனை கொழுத்தி நாமிங்கு,
ஆரவாரம் செய்து குடும்பத்துடன்
மகிழ்ச்சிகொள்வோம் தமிழர்கள் நாம்.
கவிஞர் கவிதாசன்