இப்படி நாம் காதலிப்போம்தைப் பொங்கல் கவிதைப் போட்டி-2015

இருக்கும் இடத்தினில் நான்
இல்லாமல் போவதும் என்னருகே
இல்லாத உன்னையே எப்போதும்
இருப்பதாய் தவறாய் நினைப்பதும்
சல்லாபம் செய்வதாய் இரவில்
உல்லாசக் கனவுகள் காண்பதும்
எல்லாமும் மறந்து அதிலே
எல்லைகள் எல்லாம் மீறுவதும்
காலையில் இவையெலாம் நல்ல
கனவென புரிவதும் அதனை
எண்ணி எண்ணியே உள்ளம்
பூரித்து நிற்பதும் மாலை
வந்ததும் உந்தும் சபலத்தில்
சிந்திக்கா மலுனை அழைத்து
கடற்கரை, திரைப்படம், பேருந்து
குடைவரை கோயில் படகு மறைவு
இத்தாலிய அப்பமூலை மின்
சார ரயிலென என்றும்
அருகில் இறுக்கி அமர்ந்து
பருகியுன் அழகை அதரத்தை
உருகி உருகி வழிந்து
பெருகிடும் காதலில் மெலிந்து
வருவது வரட்டுமெனத் துணிந்து
கரும்புக் காதலிதைத் தொடர்வோம்

இது எனது கவிதை என உறுதி அளிக்கிறேன்.

தா. ஜோசப் ஜூலியஸ்,
எண்.4/45, 11வது டிரஸ்டு கிராஸ் தெரு,
மந்தவெளிப்பாக்கம், சென்னை-28
தொ.பேசி எண். 9884715578..

எழுதியவர் : தா. ஜோ. ஜுலியஸ் (14-Jan-15, 2:28 pm)
பார்வை : 78

மேலே