சாதி அழி மதம் அழி சாதி பொங்கல் போட்டிக் கவிதை-2015

சாதி அழி! மதம் அழி! சாதி! (பொங்கல் போட்டிக் கவிதை-2015)

ஆற்றியி ருந்தனம் அன்பின் இனமாய்!
---------------அடிமைகள் ஆவதும் மறந்தவ ரெனவே!
ஏற்றினம் பலருடை இணையடி வழுத்தி
---------------எமது,நன் முகக்கம லங்களும் கூம்ப!
சேற்றிதழ் கமலமாய்ச் சிறுவயல் உரமாய்ச்
--------------சிறுமைகள் கண்டனம் செம்மைகள் இழந்தே!
ஏற்றுயர் கொடியுடை யாய்,எம் பெரும!
---------------இவைகளைத் திருத்த எழுந்தரு ளாயோ?


அருணன் வந்திருள் அகற்றினன்; அகத்திருள்
---------------அகற்றவே கடைக்கண் அடைத்திருப் பாயோ?
கருணை விழிகளைக் காணுவோர் தம்முள்
---------------கனிந்தனர் கன்னமும் பழுத்திடப் போமோ?
இருள்மனம் விட்டுமே எகிறுமோ சாதிகள்?
------------------இவருளம் இன்னுமே எரிந்திட லாகுமோ?
அருள்,நிதி யாளனே அவர்மனக் குன்றிலே
------------------ஆனந்த சோதியை ஏற்றிட வாருமே!

கூவின பூங்குயில் கூவின கோழி
------------------குருகுகள் சிலும்பிக் கூறின சாதிகள்!
மேவிய சூரிய மெல்லொளி பட்டே
-----------------மறைந்தன விண்மீன் புள்ளிகள் தாமுமே!
தேவரீர் செய்த திருவினை சாதியேல்
----------------தேவையோ மதமெனத் திட்டுவார் கேட்டியோ?
யாவரும் உன்னடி யாரெனச் சமத்துவம்
----------------- எழும்பிடச் சாதியை எரித்திட மாட்டியோ?
=== ===
இந்த படைப்பு என்னால் படைக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்துறேன்.

எசேக்கியல் காளியப்பன்

வயது – 71
(வயது எதற்கு? முதியோர் சலுகை ஒன்றும் அறிவிக்கப்படவில்லையே!)

உறைவிடம் -
மனை எண்:7, சிறீ பார்சுவ நாத் அவென்யூ
மாடம்பாக்கம்,
கைபேசி : 9840 115 227

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (14-Jan-15, 3:10 pm)
பார்வை : 85

மேலே