இப்படி நாம் காதலிப்போம் பொங்கல் கவிதைப்போட்டி 2015

வானலைந்த தீயெழுந்து வீறுகொள்ளும் காலை
. வாசங் கொண்ட காற்றினோடு வட்டஅலைப் பொய்கை
மீனலைந்த தாய்துடிக்கும் மென்விழி கொள்மங்கை
. மேனி நோக்கி மாலைவிட்ட மன்மதன் கைப்பாணம்
மேனெழுந்து காற்றிலோடி மேதினியில் வீழ்ந்து
. மென்மலர்முகை களென்று மொட்டலர்ந்த தாமோ
தேனழைந்த பூக்கள் கண்டும் தீந்தமிழ் கொள்ளின்பம்
. தேறுமோ விட்டே தமிழைக் காதலிப்போம் வாடி

ஆ,நலிந்து போகுதெங்கள் அன்னை தமிழ்த்தேசம்
. அன்புகொண்டு தேசம்மீது காதல்கொள்ள வாநீ
தேனழைதமிழ் சுவைக்க தித்திக்கின்ற தாகி
. தீந் தமிழ்நற் காவியங்கள் தேர்ந்த நெஞ்சம் கூடி
கூனெடுத்த நெற்றிமீது கூந்தல் கலைந்தாடி
. கொஞ்சுகின்ற போதுகொள்ளும் ஆசைதன்னை நீக்கி
தானெடுத்த போரிலே எம் தமிழ் அழித்த சாதி
. தான் விலக்கவேண்டி மண்ணைக் காதலிப்போம் வாடி

ஆனஎம் தமிழ் வருந்த ஆனந்திப்ப தோடி
. ஆக என்ன பார்த்திடுவோம் அத்தனைக்கும் நீதி
போனஎங்கள் வாழ்வுகொள்ளப் பின்னும் நேர்மையாகி
. புத்துணர்வு கொண்டுமக்கள் வாழவைக்க வேண்டி
ஞானமுள்ள தாக மாந்தர் நாளூம் இன்பம் மேவும்
. நல்லவாழ்வின் இலட்சியத்தைக் காதலிப்போம் வாநீ
நானெழுந்து கொள்ளும்வேளை நாடிநீயும் வாடி
. நாடும் நல் சுதந்திரத்தைக் காதலிப்போம் கூடி

இது எனது சொந்தக் கவிதை யாகும்

புனை பெயர் கிரிகாசன் (பெயர்: கனகலிங்கம்) வயது 57
இருப்பிடம் 75, baron gardens , barkingside ,ilford , இக்6 1pb,ESSEX ,UK

எழுதியவர் : கிரிகாசன் (14-Jan-15, 6:44 pm)
பார்வை : 97

மேலே