பொங்கல் வாழ்த்துக்கள்
தை பிறந்தது கூடவே பல
வழியும் பிறந்தது..............
மூதேவி ஓட வேண்டும்
சீதேவி படி ஏறி
வரவேண்டும்................
சீமான் வீட்டில்
மட்டும் இல்லை
குடிசையிலும்
பொங்க வேண்டும்
பால் பொங்கல்.........
சுமை தாங்கிய
வேளாண்மைக்கு
விடுதலை கொடுக்க
வேண்டும்......................
அறுவடையான
நெல் கதிரைக்
கொண்டு வந்து
கொட்ட வேண்டும்
திண்னையிலே........
தித்திக்கும் பொங்கல்
சுவைக்க வேண்டும்
இயற்கையைக்
கட்டிக்காட்கும்
இறைவனுக்கும்
இரு கரம் கூப்பி
நன்றி கூறவேண்டும்......
மதங்கள் பாராது
விளைச்சல் கொடுக்கும்
விவசாயியையும்
மதிக்க வேண்டும்.....................
அவனின் சேற்றுப் பூமி
வரண்டு விடக் கூடாது
என்று நாமும் பிராத்தணை
செய்யவேண்டும்........................
தோட்டம் தொறவு எல்லாம்
செழிக்க வேண்டும்
தொடங்கிய இந்த ஆண்டு
இன்பமாகவே நிறைவு
பெற வேண்டும்..................
பொங்கல் என்றால்
தமிழர் திருநாள் மட்டும்
இல்லை மகிழ்வான
கொண்டாட்டமும் என்று
அருத்தமும் இல்லை.......
இயற்கையைக் கட்டிக்
காட்கும் இறைவனுக்கும்
உளுது உழைக்கும்
உழவனுக்கும் பானை
வடிவம் கொடுக்கும்
குயவனுக்கும் அக்கினி
சாட்சியாக நன்றி கூறும்
நாள் தான் இந்த திருநாள்......
அன்பு உறவுகள் அனைவருக்கும்
இனிய பொங்கல் திருநாள் நல்
வாழ்த்துக்கள்..........(சாந்தா)♥