மூப்பு

வலுவிழந்த உடலோடும்
வற்றாத நடையில்
வயோதிகம் என்றோர்
காத்திருப்பில்
கதிகலங்கி போனது
மரணம் என்றொரு
அச்சொல்....

முடிவுரை நிலையடைந்து
முகம் மழித்து
மோகம் நகர்த்தும்
அயர் நித்திரையில்
குருடனின் செவியடைந்து
கூக்குரலிடும்
விதி முடிந்த ஈனக்குரல்....

புரட்டிப் பார்க்கும்
புத்தகமாய்
விரட்டி வந்த
காலம் தனை
திரட்டிச் செல்லும்
திருடனைப்போல்
மிரட்டிச் செல்லும்
அந்த ஒரு நடுக்கம்....

நரைபிடித்த
ரோமம் தம்மை
சிறைப்பிடித்து
ஆண்டதாய்
விலங்கிட்ட கைதிபோல்
கைகளில் ஊன்றுகோல்....

தன்னிலை
எரிபட்ட
தணலின் மேல்
தண்ணீர் தழும்பி
தவறிழைக்க
நூந்து போவதேன்
சாம்பல் போல்...

காலம் கனிவுடன்
கடந்த
பெருமகனென்றொரு மதிப்பில்
தொப்புள் கொடியறுந்து
மூப்பு கொடி கொணர்ந்து
முக்தி
அடைந்திடல்
நன்றென்று....

எழுதியவர் : அன்வர்தீன்.... (16-Jan-15, 3:53 am)
பார்வை : 186

மேலே