உன் உறவு எனக்கு வேண்டும்
உறவுகள் உருக்குலைந்து போய்
உணர்வுகள் சிதைய வைத்து
உயிரோடு எனை எடுத்து செல்லும்
உன் உறவு எனக்கு வேண்டும் !
என் இமை மூடும் ஒவ்வொரு
நொடியும் இதயத்தை வாட்டும்
உந்தன் கனவும் நினைவும்
என்னுள் எனக்கு வேண்டும் !
நித்தம் நித்தம் உன் நினைவில்
பித்தம் பிடித்தவனாய் கலங்கி
நிற்கும் என் மனதை வருட
உன் உறவு எனக்கு வேண்டும் !
உன் மூச்சுக் காற்றில் ஏங்கி
உயிர் வாழும் எனக்கு தனிமையில்
நான் காதல் ராகம் பாட
நீ என்னுள் வர வேண்டும் !
இந்த உலகம் இருக்கும் வரை
நம் காதல் கடல் அலை போல்
ஓய்வின்றி நிற்காமல் ஊடல் செய்ய
உன் உறவு எனக்கு வேண்டும் !
சாதியைக் காட்டி நம்மைப் பிரிக்கும்
சண்டாளர்களின் உலகில் நீயும்
கலந்து விடாது வாழ - நீ
என்னுள் வர வேண்டும் !
காதல் மழை பொழிய நானும்
அதில் ஆசையாய் நனைய நீயும்
மேகங்கள் ஒன்று கூடி நமை
வாழ்த்த நீ என்னுள் வர வேண்டும் !
உன் பெண்மையின் மென்மையை
அறிந்து கொள்ளவும் - என்
ஆண்மையின் ஆளுமையை நீ
அறிய என்னுள் வர வேண்டும் !
மீண்டும் மீண்டும் காதலினால்
கசிந்துருகி கவிதையாய் உனை
வடிக்கும் என்னிடம் ஓடோடி வர
உன் உறவு எனக்கு வேண்டும் !