நீயும் எனக்கோர் தாய் தான்

கருவறையில் நான் கண்ட
தாய் அன்பை உன்
கனிந்த கண்ணறையில்
கண்டு சிலிர்த்தேனடி !
நீயும் எனக்கோர்
தாய் தான் என்று
உணர வைத்தவள் நீயடி !
மண்ணில் புதைத்தாலும்
மறுஜென்மம் எடுத்து
உனைத் தேடி வருவேனடி !
காற்றில் மறைந்தாலும்
என் மூச்சுக் காற்றை
உனக்காக விட்டுச் செல்வேனடி !
உன் இதயத்தை இரும்பாக்கிக்
கொள்ளாதே!கரும்பாக இனிக்கும்
என் இதயத்துள் வருவாயடி !
காத்திருக்கிறேன் உந்தன்
காதலுக்காக ..தினம் என் வீட்டு
ரோஜாசெடியும் உனக்காக பூக்குதடி !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-Jan-15, 1:03 am)
பார்வை : 131

மேலே