வெறுக்கிறேன்

பெண்களை வெறுப்பவனை
காதலால் மாற்றுவேன் என்று
சொன்னவள் நீ

எல்லா பெண்களையும் வெறுப்பவன்
நானிருக்க உன்னிடம் மட்டும்
சிக்கிக் கொண்டதெப்படி

புரிந்து கொண்டேனடி
பெண்களால் முடியாதது
எதுவுமில்லை என்று

சபதத்தில் ஜெயித்து விட்டதாக
எண்ணி விடாதே இன்னும்
பெண்களை வெறுக்கிறேன்

வேறொரு பெண்ணை
கனவிலும் நினைக்கக் கூடாது
என்பதற்காக ......

எழுதியவர் : fasrina (18-Jan-15, 10:23 am)
Tanglish : verukkiren
பார்வை : 118

மேலே