கையடக்க குறிப்பேடு

..."" கையடக்க குறிப்பேடு ""...

கையடக்க குறிப்பேடு என்
கதைகளை உள்ளடக்கிய
சுவடுகளை சுமந்து நிற்கும்
காகிதத்தின் சுவடியும் நீ !!!

புரட்டியதை பார்க்கையில்
புரட்டிப்போட படுகின்றேன்
நண்பனிடம் சொல்லாததை
உன்னோடேதானே நான் !!!

எழுதிவைத்த விழியோரம்
வழிந்தோடிய கண்ணீரும்
பத்திரமாய் முத்துக்களாய்
உன்னில் சேர்த்துவைத்து !!!

நித்திரையில்லாத ராத்திரி
முத்திரை பாதிக்கும்
விழிமூடா கனவுகளின்
கருவூல பெட்டகம் !!!

தூசுபடிந்த பெட்டிக்குள்
பசுமைகாய் படர்ந்திருக்கும்
எந்தன் ரகசியங்களின்
ரசிக்கும் ரசனை சிநேகிதன் !!!

அவளைக்கண்ட நாள்முதல்
எழுதப்படாத காகிதமாய்
காதலின் நாம் விழுந்துவிட
காகிதமெங்கும் கவிதையாய் !!!

கவிதை வயலுக்கு கவிதந்த
என் கையடக்க குறிப்பேடே
நான் காலம் கடந்தேதான்
உன்னை யோசிக்கிறேன் !!!

ஏனோ இதுவரையிலும் நான்
உன்னை தொட்டதுமில்லை
அதனால்த்தான் எனக்கிங்கு
எந்த தொல்லையுமில்லை !!!

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (18-Jan-15, 10:30 am)
பார்வை : 69

மேலே