தனிமை

மிரலுகிறேன் மீளுகிறேன் ஒரு நொடிகூட
மன்னித்து விடும் என்னை கடந்து சென்றால்
என் தவிப்பை கண்டு...
மிஞ்சுகிறேன் தேடுகிறேன் கரைத் தேடும் கிளிஞ்சல்கள் போல
அடிக்காமல் அழுகிறேன்
திட்டாமல் பயம் தான் மனதில்
நீ பிரிவையோ என நினைக்கும் போது
ஒன்றை உணர்ந்தேன் தனிமையே நிரந்தரம் என்று
அங்கும் நினைவை நீட்டுகிறாய் ஞாயமா?