தோழியின் அன்பில் விளைந்தது

அகமதில் அழகெடுத்து
அன்பெனும் முகமெடுத்து
அழுமுக மதைமறந்து
அணிகலனாய் சிரிப்பவள்..!

கடல்கடந்து இருந்தாலும்
கள்ளியிவள் விளையாட்டு
கலையாமல் இருக்குதடி
கண்மூடி தூங்கினாலும்..!

உறவுக்கும் உணர்வுக்கும்
உடையாத பாலமெனும்
படிக்கட்டு போட்டுவிட்ட
பக்கத்துணை இவளன்றோ..!

சிறுசிறு சிணுங்கல்கள்
சில்லறையாய் வந்தாலும்
சிரமமென்று பாராமல்
சீக்கிரமாய் மறந்திடுவாள்..!

கிண்டலதை செய்தாலும்
கள்ளனென சொல்லியவள்
காரணமே கேட்க்காமல்
காலமென தள்ளிடுவாள்..!

கோபமதை கொட்டிவிட
குறையாத தங்கம்போல்
அறியாத பிள்ளைபோல்
அடம்காட்டி நின்றிடுவாள்..!

அழகான உடன்பாடு
ஆழம்தெரியா கடலோடு
முத்தெடுக்க முக்குளித்தேன்
முயற்சியெனும் உறவாக..!

முடிவிலா உணர்வுகள்
முகம்காணா உள்ளங்கள்
எண்ணங்கள் இனிதாக
என்றென்றும் வாழ்த்துகிறேன்..!

எழுதியவர் : ஜாக் .ஜே .ஜே (18-Jan-15, 6:10 pm)
பார்வை : 163

மேலே