பேசலாம் பேசலாம் பேசலாமே

எப்பொழுதும் நலம்தரும்படி,
உண்மையை நன்மைதரும்படி,
பேசுவதென்பது உத்தமம்!

தவறியவர்கள் திருந்தலாம்!
திருந்தும் வாய்ப்போடு,
உண்மையை உடைத்துப்போடு!

சில உண்மைகள் கசப்புமருந்து
அறிந்தும் அறியாமலும் தவறியவர்களுக்கு..
உண்மை அங்கு நிச்சயம்தேவை!

எல்லோரையும் மகிழ்விக்குமெனில்,
பொய்யாகவும் பேசலாம்..
அது பொய்யென தெரியும்படி!

சொல்லில் சிறந்து மொழியில் சிறந்து
வாக்கில் சிறந்து பண்பில் சிறந்து
வாழ்வில் சிறந்து வாழ்வோம் உயர்ந்து!

எழுதியவர் : சீர்காழி சபாபதி (19-Jan-15, 11:00 pm)
பார்வை : 97

மேலே