காவியத்தலைவன்
மேகத்தின் உராய்வோ?!
மழை!
தாகத்தின் பிரதிபலிப்போ?!
நீ!...
பச்சை புல்லின்
நுனியை ..
போர் வாளாய்
மாற்றிவிட்டாய்!...
புதுமை பெண்ணை
பொக்கிஷமாய்
போற்றி பாடிய
பாரதி நீ!..
ஆத்திரம் கொண்டே
அரவணைக்கும்
கலையை கற்றவன்
நீயன்றோ!..
கருப்பு வெள்ளை
உன் அடையாளம்!
வண்ண தாளே
உன் அடித்தாளம்!..
நெஞ்சம் உன்னை
மறந்தாலும்
கவியில் வாழும்
காவியன் நீ!...
தமிழுக்கு சாபம்
யார் தந்தார்!
உன்னை இழந்து
ஏங்கிடவே!..