கடைசி கப்

கடைசி கப் சார் !
கடையை மூடிட்டேன் சார் !
காசு கொடுக்காட்டாலும் பரவாயில்லே சார் !
கால் பரீட்சை நாளையிலிருந்து சார் !
காலையிலே தான் படிக்கணும் சார் !
கண்டிப்பா வேண்டாம்ன்னு மட்டும் சொல்லாதீங்க சார் !
காசை முதலாளி கிட்டே கொடுத்துட்டு போகணும் சார் !
கால் நடந்து நடந்து வலிக்குது சார் !
காசுக்காக அம்மா காத்து இருப்பாங்க சார் !

கடைசி கப் சார் !
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வலிகளோடு வாழ்க்கை சுமையையும் சுமந்து கொண்டு இருக்கும் இச் சிறுவர்களின் எதிர் காலம் இவர்களின் நிகழ் காலத்தால் பாதிக்க படுகின்றது ! கல்வி பருவத்தில் கடினமான பாதையை கடந்து கொண்டு இருக்கும் இச் சிறுவர்களுக்கு ஒரு விடியல் என்றோ ???????
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
==கிருபா கணேஷ் ==

எழுதியவர் : கிருபாகணேஷ் (21-Jan-15, 11:37 pm)
Tanglish : kadasi kap
பார்வை : 53

மேலே