யாரடி நீ

யாரடி நீ?
நீயும் நானும்
வரப்புவழி நடக்கையில்
பச்சை வயல்
இன்பத்தைக் கூட்டுகிறது!
செந்நெல் கதிர்கள்
காற்றோடு கலந்து
காதல் கவிதையொன்று
தீட்டிக் கொண்டிருக்கின்றன!
சிறுதூறல் திசை
மாறிமாறி நம்மேல்
பூமாரி பொழிந்திடும்
வேளையில் - உன்
புன்னகையில் எனை
மறக்கிறேன்!
மதி இழக்கிறேன்!
உனதழகோ
இன்னும் கூடியிருக்கிறது
ஈர உடையில்!
இதழ்களின் நுனியில்
நிற்கும் பனித்துளிகளாய்
மழைத்துளிகள் உன்
உதடுப்பரப்பில்!
அங்கங்கள் யாவும்
அமுதாய் மாற
அமுதப்பெண்ணே உன்னை
அள்ளி அணைத்திட
நினைக்கையில் உன்
முந்தானை நுனியில் என்
முகம் துடைத்து
தலைக் கோதி
துவட்டி விடுகிறாய்!
இவள் என்ன
தாரமாக வந்த
தாயா? தாயாக
வந்த தாரமா?
மெய் மறந்து
சாய்ந்து போனேன்
உன் தோளில்!
கண்விழித்துப் பார்க்கையில்
உன் தேகத்தின்
கதகதப்பில் குளிர்
காய்ந்து கொண்டிருக்கிறேன்
ஓருயிர் ஈருடலாய்!

எழுதியவர் : குப்பன்.கே (22-Jan-15, 10:45 am)
சேர்த்தது : குப்பன் கோ
Tanglish : yaradi nee
பார்வை : 78

மேலே