பட்டமரத்தின் பாதச்சுவடுகள்
பட்டமரத்தின் பாதச்சுவடுகள் ...!
ஏற்றிவிட்ட ஏணியின் வாழ்க்கை
ஏளனமாக போனது யென்று
கடந்துவந்த பாதைகள் தன்னை
கண்ணீர்மல்க பார்க்குது நெஞ்சம்..!
எத்தனை தவங்கள் நாமிருந்தோம்;
எத்தனை வரங்கள் நாமிழந்தோம்;
அத்தனை யாவும் நமக்கெனயின்றி
ஆசைமழலை சுகமென கண்டோம்..!
கல்லுமுள்ளும் கரடெனும் மலையும்
கடந்துவந்த பாதங்கள் கனிந்து
வெடித்துநிற்கும் வலிகளை எல்லாம்
வேதனைதீர்க்கும் பிள்ளைக ளென்று
அழகைசுமந்த தேகத்தை யிழந்து
ஆசைக ணவனையும் மிழந்து
பெற்றவுறவு போதும் என்றாள்
பைத்தியம் பிடித்த பாசத்தாலே..!
சுமைகளவனை சுமந்த வயிற்றுக்கு
சோகமட்டும் மிச்சம் வைத்து ..!
கூறுபோடும் குணத்தா லவனோ
கூடுவிட்டு தாவி பறந்தான் ..!
சொந்தமெல்லாம் மகனே யென்று
சொத்தைகூட எழுதி வைத்தாள்
கரும்பைதேடும் எறும்பாய் யிவனோ
காரியமானதும் கழட்டி விட்டான்..!
ஆஸ்தியோடு அவனது வாழ்க்கை
ஆடம்பரமாய் போனது இன்று
அங்கம்சுருங்க அசிங்கம் பார்த்து
அலையவிட்டான் தாயினை இன்று..!
எதிர்பார்ப்போடு ஏங்கிய கைகளோ
எல்லாமிழந்து தெருவினில் இன்று
வாடுமெயிலில் வாடிட கண்டும்
வாதையென்று ஒதுங்கிச் சென்றான்..!
செதுக்கியசிற்பி சிதைந்தா னின்று
செய்யுமழகின் கண்களை மறந்து
உயிரைகொடுத்த உறவோ யின்று
ஊரேபார்த்திட உருகுது நின்று ...!
அன்புயென்னும் ஆயுதம் வைத்து
அறுத்துபோன அவளது வாழ்வில்
காலம்கடந்த பாசத்தை யெல்லாம்
கழட்டிவைத்த காலணி என்றாள்..!
அழகிய கனவுகள் கலைந்ததுபோல
அன்பைகலந்து வூட்டிய உறவில்
நஞ்சைவைத்து போனவன் யாரோ
நல்லநிலையை அடைந்திடு வானோ..?
உண்மைநிலையில் உன்னை வைத்து
வொருநிமிடம் நீ நினைத்துப்பார்
உலகமென்பது முருண்டை யென்பதும்
உனக்குமுளது விழித்துப் பார் ..!
இவளொரு விளக்கமுடியா விடுகதை...!

