இவ்வளவேனும் காதல் செய் - பாகம் 6

களிப்புடனே மகளோடு
கதைகள் பல பேசியவர்
கனிமொழியாள் கேள்விதனில்
கலக்கம் கொண்டார்...

"எப்படி நேர்ந்தது அப்பா
எனக்கிந்த விபத்து ..?"

வியப்புடனே வைத்தியரை
வினவினார் தனசேகரன்
எப்படி நேர்ந்ததென்றால்
என்ன அர்த்தமிது..?

தனியே அழைத்துசென்று
தனசேகரனிடம் வைத்தியர் சொன்னார்...

சொன்னதுதானே ஐயா
நினைவுகள் மட்டும்
நூறு சதவீதம் இல்லை
கடந்துச்சென்ற இரண்டாண்டு
கடுகளவும் நினைவில்லை...

சிந்தித்த தனசேகரன்
சந்தோசம் மிகக் கொண்டார்
மனைவியிடம் நிகழ்ந்ததெல்லாம்
மறைத்துவிட சொன்னார்...

அருள்நிதியம் மாளுக்கோ
ஆதங்கம் தாங்கவில்லை
இத்தனை பெரிய இழுக்கை
மகளுக்கு செய்ய துணிவில்லை..

கணவரை மீறி என்ன செய்வார்..?
கடவுளின் உதவியே நாடிச்சென்றார்...
ஈசனே! எது சரி..? எது தவறு..?
யானறியேன் என் தகப்பா...

அவர் சொல்லில் நியாயமுண்டோ
அதன்படி நடப்பதிலும் ஈவுண்டோ
அழுது வடித்தப்பிறகு அவரும்
அதே முடிவுக்கு வந்தார்.....

மகளின் முகத்தைக் கண்டு
மனம்திறந்துப் பேச இயலாது
மௌனமாய் அவள் நெற்றியில்
முத்தம் பதித்து சொன்னார்...

மகளே!
நடந்தவை நடந்தவையே அதில்
யாதொரு மாற்றமு மில்லை - அதை
தெரிந்துக்கொள்வதால் நடக்கும்
நன்மை ஏதுமில்லை....

எப்போதும் இதுபோலவே
இன்முகமாய் நீ வாழ
கடந்தக்காலத் தேடல்களை
அறவே நிறுத்திவிடு....

(தொடரும்)

எழுதியவர் : யாழ்மொழி (27-Jan-15, 4:18 pm)
பார்வை : 239

மேலே