என் வாழ்க்கை
உன்னக்காய் நான் காத்திருந்த
ஒவ்வொரு நொடியும் அளித்த ஆனந்தம்....!
தற்பொழுது என்னுள் அக்னிபிழம்பாய்...!
வழிய வந்து வல்லிய காதலை தந்தவன்
உன் காதலால் நான் உறைந்த போது
விலகி நின்று இம்சை தருகிறாய்....!
சொல்வண்ணா துயரம் நெஞ்சினை வதைக்க
என் காதலை சொல்லியும் நீ புரிந்ததில்லை
உன் மனைவியை நான் ஆனபோதும் கூட...!
நீ சொல்லாமல் புரிகிறது
இன்று தொடரும் உன் பழைய காதலை
கண்ணால் கண்ட பிறகு.....!
விலகி செல்ல மனம் துடித்து
தோற்றுப்போகிறேன்....!
உன் மேல் வைத்த பாழாய் போன காதல்
உன்னை பார்த்த மறுகணமே
என் மனதில் கற்பக விருச்சமாய்....!
நான்கு சுவர்களுக்குள் அழுகையும்
நால்வர் முன்னிலையில் காதலையும்
படைக்கிறேன் ....!
வெறுமையான வாழ்வின் சின்னமாய்
நீ கொடுத்த என் தேவதைக்காய் ....!