பனிக்கூழ் ஐஸ் கிரீம்
மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு....
"ஏங்க எங்கங்க இருக்கீங்க?"
"உனக்கு நேரம் காலமே தெரியாது ... பகல்ல நான் எங்கே இருப்பேன் ... ஆபிஸ்லதான் ... ரொம்ப வேலையாஇருக்கேன் ... இப்போ என்னால பேசுறதுக்கு நேரம் இல்லை ... ப்ரீ ஆனதும் நானே கூப்பிடுறேன்"
"அதுக்கில்லைங்க..."
"அதான் சொல்றேன்ல"
"குழந்தைங்க ..."
"என்ன குழந்தைங்களுக்கு என்ன?"
"ஒண்ணுமில்ல ... உங்களுக்கு இரண்டு டேபிள் பின்னால குழந்தைகளோட ஐஸ் கிரீம் சாப்டுகிட்டு இருக்கேன் . உங்க கூட இருக்கற பொண்ணு யாருன்னு குழந்தைங்க கேக்கறாங்க ... நான் என்ன பதில் சொல்லட்டும்?"