எழுத்தும் NAANUM

எழுதுவதற்கு ஆயிரம் இருக்கிறது
..............ஆனால்..............

அன்பினால் எழுதினால்
ஏமாற்றங்கள் அதிகமாய்...

ஆசையால் எழுதினால்
அவலங்கள் அளவில்லாமல்...

இன்பத்தால் எழுதினால்
அழுவோர் கண்ணீர் கண்முன்னால் தெரிகிறது...

துன்பத்தால் எழுதினால்
துவண்டவர் கண்களுக்கு மட்டுமே நான் தெரிகிறேன்..

உணர்வுகளுக்காய் எழுதினால்
உண்மை செத்துப்போனது துலங்குகிறது...

உரிமைக்காய் எழுதினால்
உரிய குரல்கள் கேட்க மறுக்கிறது...

கடமைக்காய் எழுதினால்
கடக்கும் வழியில் ஏகமாய் தடைகள்...

உயிர் பிடித்து எழுத நினைத்தேன்...
ஓர் உயிராகிலும் பயன்பெறுமென்றால்..

.............ஆனால் இன்று....

உலகம் புரிந்து எழுதுகிறேன்...
மனதில் அதிகம் வெற்றிடமானது உணர்கிறேன்..!

...கவிபாரதி...

எழுதியவர் : கவிபாரதி (29-Jan-15, 7:22 pm)
பார்வை : 55

மேலே