அறிவியல் ஆய்வின் அதிசயமே

அறிவியல் ஆய்வின் அதிசயமே ..!
நம் காதல் பிரிக்க முடியாத
அணுக்களாய் அகிலத்தில் நிலைத்திருக்க ...
எதிர் மின்சுமையுடைய
எலக்ட்ரானாய் --- நீ
உன் இதயத்தின் மையத்தில்
அணுக்கருவாய் -- நான் .
அணுக்களும் வெடித்துச் சிதறும்
உன் மோகனப் புன்னகையில் ...
அனலும் குளிர்ந்து போகும்
உன் மின்சாரக் கண்களில் ...
என்னை சுற்றிலும் உனது
எலக்ட்ரான் கதிர்கள் .....
புவி ஈர்ப்பு விசையோடு
ஈர்க்கிறாய் என்னை ....
நிழலாய் பின் தொடரும்
என் நெஞ்சத்தின் வெப்பத்தை
தணிக்க வரும் குளிர்நிலவே ..!
உன் நேசம் என்னை
சிலிர்க்க வைக்குதடி அன்பே ..!
உன் காதலின் முன்
புரோட்டானும் நியூட்ரானும்
தம்முள் போட்டியிடுகின்றன ..
இறுதியில் ஊடலுடன் கூடலாய்
இரண்டையுமே சுற்றி சுற்றி
எலக்ட்ரானாய் வருகின்றாய் -- நீ
தினந்தோறும் அணுக்கருவாய்
உன்னை ரசிக்கும் ரசிகன் -- நான் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (29-Jan-15, 9:03 pm)
பார்வை : 69

மேலே