மீட்க வாரும்

ஏசுவே இறைமகனே
இறங்கி வாரும்
எங்கள் மீட்புக்காய்
பாவத்தில் மூழ்கித் தவிக்கின்றோம்
எமை மீட்டு உம வழி நடத்தும்--2
(உயிருள்ள ஆண்டவரே
உயிர் அனைத்திற்கும் ஆண்டவரே
பரிசுத்த ஆவியே எங்கள் இயேசு நேசனே)--2
--(ஏசுவே)
1
மழை இல்லா காரணத்தால்
மனம் நொந்து வாழ்கின்றோம்
வானம் திறந்து மழையைப் பொழிந்து
இம்மண் குளிரச் செய்யும்
எங்கள் மனமும் குளிரச் செய்யும்
--(ஏசுவே)
2
ஒற்றுமையை இழந்து விட்டு
ஒழுங்கின்றி திரிகின்றோம்
தீய பழக்க வழக்கங்களால்
நோய்களை சுமந்து வாழ்கின்றோம்
(எமை மீட்டு உம வழி நடத்தும்) --2
(உயிருள்ள ஆண்டவரே
உயிர் அனைத்திற்கும் ஆண்டவரே
பரிசுத்த ஆவியே எங்கள் இயேசு நேசனே)--2
--(ஏசுவே)
3
கற்பனையில் மிதந்து கொண்டு
காலத்தை ஏனோ கழிக்கின்றோம்
உம்மையே நாங்கள் மறந்துவிட்டு
உருப்படாமல் வாழ்கின்றோம்
(எமை மீட்டு உம வழி நடத்தும்) --2
(உயிருள்ள ஆண்டவரே
உயிர் அனைத்திற்கும் ஆண்டவரே
பரிசுத்த ஆவியே எங்கள் இயேசு நேசனே)--2
--(ஏசுவே)