காதல் வெண்பா பா பூக்கிறது 1

இது நான் பதிந்த காதல் அந்தாதியில் முதல் பா
இதை தூய வெண்பா ஆக்கவேண்டும் முயன்று பார்ப்போம்.
பா :
~~~
விழிவழி என்னுள்ளே வருகை தந்தாய்
மொழிவழி மாலையின் அர்த்தம் சொன்னாய்
மனவழி நடந்து வென்றிடச் செய்தாய்
உன்வழியில் கைகோர்த்து நடக்கிறேன் பூவே !


வெண்பா சோதனை ----ஏற்ற சொல் மாற்றம் நீக்கல் :
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விழிவழி என்னுள்ளே வருகை தந்தாய்
நிரைநிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர்
கருவிளம் தேமாங்காய் கூவிளம் தேமா
(விளம் முன் நேர் காய் முன் நேர் விளம் முன் நேர் ----தளை சரி )

மொழிவழி மாலையின் அர்த்தம் சொன்னாய்
நிரை நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
கருவிளம் தேமாங்காய் தேமா தேமா
(முந்தயஅடி தேமா முன் நிரை விளம் காய் மா முன் நேர் --தளை சரி )

மனவழி நீநடந்து வென்றிடச் செய்தாய் (நடந்து ---நீநடந்து
நிரை நிரை நேர் நேர்நேர் நேர் நிரை நேர் நேர்
கருவிளம் தேமாங்காய் கூவிளம் தேமா
(மா முன் நிரை விளம் காய் விளம் முன் நேர் -----தளை சரி )

உனதுவழி என்வழி பூவே ! ( உன் --உனது)
நிரை நிரை நேர் நேர் நிரை நேர் நேர்
கருவிளங்காய் கூவிளம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெண்பா :
~~~~~~~~
விழிவழி என்னுள்ளே நீவருகை தந்தாய்
மொழிவழி மாலையின் அர்த்தம் சொன்னாய்
மனவழி நீநடந்து வென்றிடச் செய்தாய்
எனதுவழி பூவின் வழி !

1முதலிரண்டு அடிகளில் மாற்றமில்லை கடைசி இரண்டு அடிகளிலும்
சீர் தளை கருதி சிறு மாற்றம் செய்திருக்கிறேன். வெண்பா ஆர்வலர்கள்
படிக்கலாம் வெண்பாவில் தேர்ந்தவர்கள் தவறு இருப்பின் சுட்டலாம்

2.யாப்பெழில் கவிஞர் எசேக்கியலார் இலக்கண விளக்கப் படி
வருகை யை நீவருகை என்று மாற்றி இருக்கிறேன்

3.அர்த்தம் தந்தாய் ----மா முன் நிரை இல்லை

பொருளினைத் ----நிரை நிரை ---கருவிளம் விளம் முன் நேராக்கியிருக்கிறேன்

பூவே ----சரியில்லை . இந்த ஏ கார முடிவு இப்பவிற்கு உரியதல்ல
நாள்,காசு,மலர், பிறப்பு -----என்பது போலவே அமைய வேண்டும்
ஈற்றடியை இவ்வாறாக அமைக்கிறேன்

எனதுவழி பூவின் வழி
நிரை நிரை நேர் நேர் நேர் நிரை ( மலர் போல் )
கருவிளங்காய் தேமா
-------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jan-15, 5:55 pm)
பார்வை : 182

மேலே