நாகேஷ் - சிரிப்பு நாயகன்

சிறு வயதில் மதிய உணவு சமயம் வேண்டா வெறுப்பாக எல்லோருடனும் சேர்ந்து நான் தொலைகாட்சியில் பார்த்த MGR நடித்த அன்பே வா படத்தில் ஒல்லியான உடல்வாகு தாறுமாறான அசைவுகள் துரு துரு ஓட்டம் என்று வசனம் புரியாத சமயத்தில் என்னை சிரிக்க வைத்த மாபெரும் கலைஞன் நாகேஷ்.. அன்று முதலே அவரின் நடிப்புக்கு நான் அடிப்பொடி ஆகி விட்டேன்


என் வாழ்நாளில் எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத காவியம்" காதலிக்க நேரமில்லை "... படம் ஆரம்பம் முதலே சிரிக்க தொடங்கிவிடலாம் ..அதற்கு காரணம் இரண்டு பேர் ஒருவர் நடிகர் பாலைய்யா மற்றொருவர் நாகேஷ் ..நாகேஷின் timing நடிப்பு சிரிக்க வைத்துகொண்டே இருக்கும் ...பாலைய்யா நாகேஷ் இடையே நடக்கும் உரையாடல்கள் கிளாசிக் ...
அந்த படத்தில் நாகேஷ் பேசும் வசனம் "THERE YOU ARE " ..எனக்கு மிகவும் பிடித்த பஞ்ச் வசனம்

அவர் நடித்ததில் பிடித்தது தில்லான மோகனாம்பாள் ,எதிர் நீச்சல் ,பாமா விஜயம் ,பட்டினத்தில் பூதம்,ஆயிரத்தில் ஒருவன் ,மைக்கல் மதன காமராஜன் .அபூர்வ சகோதரர்கள் .இப்படி சொல்லிகொண்டே போகலாம்

நாகேஷின் நகைச்சுவை காட்சிகள் என்றும் அழியாதது ... HE IS EVERGREEN LEGEND ...
இன்று அவரது நினைவு தினம் .

எழுதியவர் : அருன்வாளி (31-Jan-15, 12:49 pm)
சேர்த்தது : அருண்ராஜ்
பார்வை : 160

மேலே