அன்புத் தம்பி இராஜ்குமாருக்கு

முத்தமிழும் முத்தமிடும் முதன்மைக் காதலா
காவலர்கள் ஆயிரம் இருந்தால் என்ன - தமிழுக்கு
காதலன் நீ ஒருவன் தானே !
காத்திருந்து காதலித்தாயோ அல்லது
காத்திருக்கும் உன் காதலிக்கு நீயே கவித் தாயோ !
தென் மதுரை மன்னவனோ - நீ
தேன் மதுர தமிழ் சொன்னவனோ !
கவிக் காதலன் என்கிறார்கள் - உன்னை
தேன் மொழிக் காதலன் என்பேன் நான் !
தேடிப் பார்க்கிறேன் உன்போல் கவி எழுத
காணவில்லையே காதலர்களை !
ஆச்சர்யம்தான் எப்படி கிடைக்கிறது
வார்த்தைகள் உனக்கு மட்டும் !
தேன் சொட்ட நீ வடிக்கும்
கவிதைகள் மொழியுமே பதில் !
எத்தனை தவம் செய்தாளோ இந்தத் - தேன்
தமிழ் மொழியால் - உன்னைக்
காதலனாய் கொள்வதற்கு !
கல்லும் காதல் கொள்ளச் செய்யும் - உன்
கவி சொல்லும் காதல் நயம் !
நல்ல வேளை நான் ஆணாகிப் போனேன்
நீ என்னை அண்ணா என்றழைக்க - தவறி இருந்தால்
அத்தான் என்றல்லவோ அழைத்திருப்பேன் !
காதலிப்பவர்கள் ஆயிரம் உண்டு
உன்னை மட்டுமே காதலே காதலிக்கிறது !
காலம் சொல்லும் காவியத் தலைவர்களின் மத்தியில்
காத்திருக்கிறது இடம் காதல் இளவரசன் - உன்
பெயர் எழுதப்பட !
எழுந்திரு உன் எழுத்து எம்மை
இன்னும் எழில்பட எழுத வைத்தது !
எங்கிருந்தோ வந்து என்
உள்ளம் நுழைந்து தம்பியானாய் !
தவம் செய்து தளம் எனக்கு பெற்றுத் தந்த
கவி வரம் நீயடா !
காலம் வரும் காத்திரு வருகிறேன் உன்
அண்ணியோடு
உன் காதலை உண்டு சேர்க்க !
அன்புத் தம்பிக்கு அண்ணனின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !
வாழ்க வழமுடன் !