கோவணத்தலைவர் வாழ்க

"வர வர இந்த ஆளுக்கு வெவஸ்தையே இல்லாமே போச்சுயா.....இவரையெல்லாம் யாருயா தலைவராக்குனது....!!"


"ஏன் என்னாச்சு..?"


"விவசாயிகள் பொதுக்கூட்டத்துல பேசுறதுக்கு அவரு கோவணம் கட்டிக்கிட்டு வரப்போறாராம்..... அட...அவரு மட்டும் வந்தா கூட பரவா இல்லையே... நம்மளையும் கோவணம் கட்டிக்கிட்டு வரச்சொல்றாரே.... ம்ஹூம்....இந்த பொழப்புக்கு...."


"கோபப்படாதய்யா... காரியம் ஆகணும்னா... ஆழமா இறங்கி வேலை செய்யறதுல தலைவர் கில்லாடி தெரியுமா...?!"


"என்னய்யா சொல்ற..?"


"யோவ்.... மக்களை நிரந்தரமா கோவணம் கூட இல்லாம ஆக்கணும்னா நம்ம கொஞ்ச நேரம் கோவணம் கட்டினா தப்பே இல்லைங்கிறது தலைவரோட கொள்கை....புரிஞ்சதா...!"


"ஓ...ஓஹோ....புரிஞ்சது புரிஞ்சது...! தன்மானச் சிங்கம் கோவணத்தலைவர் வாழ்க..!!!"

எழுதியவர் : உமர் ஷெரிப் (4-Feb-15, 4:31 pm)
பார்வை : 192

சிறந்த நகைச்சுவைகள்

மேலே