நெஞ்சு பொறுக்குதில்லையே ​- ​மண் பயனுற வேண்டும்- கவிதை போட்டி

கருவறை முதல் கல்லறை வரை
காயங்களும், கண்ணீருமா மனிதனின் திரை

கற்றுக்கொள்ள பள்ளி வரும் என் தோழிகள்
கற்புக்கு வேலி கேட்பதுதான் வேதனை

குழந்தைத் தொழிலாளர்களாய் என் கண்மணிகள்
செல்வந்தர்களிடம் காலணிகளாய் தேய்வதும் வேதனை

நோய் ஆற்ற வந்த சில மருத்துவமனைகள் - பணப்
பேய் பிடித்து மக்களை ஆட்டி வைக்கிறதே

ஊழல் என்ற ஒன்று அதிவேகமாய் - நாட்டின்
முதுகெலும்பென வளர்ச்சி அடைந்து நிற்கிறதே

மாளிகை கேட்கவில்லை என் அன்னையர்கள் - அனாதை
இல்லத்திற்கு தான் அனுப்ப வேண்டாம் என்கிறார்கள்

தங்க அணிகலன்கள் கேட்கவில்லை என் தங்கைகள் - மது
அருந்த தங்கத் தாலி அறுத்திடாதே என்கிறார்கள்

எழுதப்பட்டது வரிகள் மட்டும் அல்ல
சமூகத்தில் பலர் சிந்தும் கண்ணீர் துளிகள்

என்பதை நினைக்கும் போது மனித நேயமுள்ள
ஒவ்வொருவருக்கும் நெஞ்சு பொறுக்குதில்லையே..

-ராஜேஷ்

எழுதியவர் : ராஜேஷ் (5-Feb-15, 3:48 pm)
பார்வை : 154

மேலே