நெஞ்சு பொறுக்குதில்லையே மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

நாடு பஞ்சத்தில்! பாரதம் லஞ்சத்தில்!
விவசாய பொருளெல்லாம் அஞ்சுபத்துனு விற்கையில்
விதைக்கெல்லாம் காப்புரிமை தந்து விர்ரென்று
விண்ணை தொட்டு விலைவாசி நிற்குது பாரு !

யாரோட பயிர்வித்துக்கு யாருக்கு உரிமை?
என்னப்பனுக்குகப்பன் எழுதபடிக்காததாலே இந்நிலைமை
கோடிக்கு பல்லாக்கு தூக்கும் அரசியல் சாயம் வெளுப்பது எப்போ ?
அட அஞ்சு காணி நிலமும் அரை காணியாச்சு

அதிலும் விதைக்க வழியற்று நீர்வற்றி போச்சு
பொருளாதார கொள்கையை உலகமயமாக்கி உலகமகா யோக்கியனு போடுறான் வேசம்!
உள்ளூர் பொருளையெலாம் மட்டமாக்க வெளியூரு பொருள் விற்க புதுசட்டமாகி
விர்ரென்று ஏறுது விலைவாசி! தலைவனின் வங்கி கணக்கென்ன நீ யோசி !!

வீதியில் நிற்குது மொத்த பாரதம்!மெத்தன போக்கே அதன் காரணம் !
விதியேனு கிடந்தா குறையாது பாரம்!
வீதியில் வந்து கூட்டமாய் போராடி நில்லு !
விவசாயி வீட்டிலும் பொங்கட்டும் புதுநெல்லு !

தீவுகள் நாடெல்லாம் தீர்வுகண்டு செழித்தோங்க
தீபகற்பமான நம்தேசம் தீர்வின்றி தலைதொங்க
வீட்டிற்குள் மனதை பூட்டி நாட்டிற்குள் புலம்பல் ஓங்க
நாமமைத்த கூண்டு சிறைக்குளடைபட்டு நாமே !!

நாளைய தேசம் குட்டிஜப்பானென்று கொக்கரிக்கிறோம்!
நம்நாட்டுக்கு இணையா பிறநாட்டை காட்டிட ஏனோ மறுக்கிறோம்!
அயல்நாட்டில் சேர்த்த பணமெல்லாம் உள்நாட்டில் முதலிடாய் ஆகாதவரை
உன்னுரிமையும் பறி போகுமென்பதே திண்ணம் !!

எழுதியவர் : கனகரத்தினம் (5-Feb-15, 6:22 pm)
சேர்த்தது : கனகரத்தினம்
பார்வை : 88

மேலே