நெஞ்சு பொறுக்குதில்லையே - மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி
மதி பெற்று வாழத்தானே
மாணவர்
மது குடித்து வீழவா
மாணவர்
பிஞ்சுகளின் கரங்களில்
மதுவைக் கண்டு
நெஞ்சில் சோக சுரங்கள்
சுரக்கின்றன
மரணச் செடிக்கு
மது ஊற்றி வளர்க்கிறார்
உறவுகளைக் கொன்று
உரமிட்டு வளர்க்கிறார்
சிந்தனையை சிறையில் தள்ளி
பகுத்தறிவை பாதாளத்தில் புதைக்கும்
மது எதற்க்கு ?
மதுவை நாவில் ருசிக்கும் -நீ
அப்பாவின் வியர்வைத் துளியையும்
அம்மாவின் கண்ணீர்த் துளியையும்
மனதிலே ருசித்துப்பார்
உண்மைகளை உணர்ந்து கொள்வாய் .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
