ஆதலினால் காதல் செய்வீர் -மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

பூவே !உன்னில் எத்தனை வகை
உனக்கு எத்தனை வகை

மனிதனை போல நீயும் ஒரு முறை பிறக்கிறாய்
நீயோ உன் பிறப்பால் மனிதர்களை சிறப்படைய செய்கிறாய்
மனிதனோ தான் பிறப்பால் சண்டையிட்டு கொண்டுயிருகிறான்
நீயோ உன்னை தீண்டும் காற்றுக்கு உன் நறுமணத்தை தருகிறாய் !

மனிதனோ தன் சக மனிதனை தொட
மறுக்கிறான் - தீண்டாமை என்ற பெயரில்
நீயோ வண்டுகளிடம் பேசாமலேயே உனக்குள்
இருக்கும் தேனை அதற்கு தருகிறாய் !

மனிதனோ தன் அண்டை நாட்டு மக்களிடம்
அன்பு காட்ட முடிவில்லா பேச்சுவார்த்தை நடத்துகிறான்
மனிதனை போல ஆறறிவு இல்லாவிட்டாலும்
மனிதன் உன் முன்னே அற்பம் தான் !

மனிதன் உன்னை பார்த்து கற்றுக் கொள்ளட்டும்
விதவைப் பெண்ணை கூட அலங்கரித்து ஒரு
சமுதாய மாற்றத்தை உருவக்கின்றாய் என்று!

சமுதாயத்தை மாற்ற என்னால் முடியாது !
என்னை நானே மாற்றி கொண்டேன் .......
உன்னை போல காதல் செய்ய !

எழுதியவர் : விவேகா ராஜீ (8-Feb-15, 12:25 pm)
பார்வை : 93

மேலே