நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம் மண் பயனுற வேண்டும்

அனைத்தும் இருக்கிறது எம் நாட்டில்
வளம் செழிக்கும் வனங்கள்,
ஈரம் குறையாத மணல் மணம்
ஒன்று கூடிய வண்ண மனிதர்கள்.
ஏதற்கும் அஞ்சாத தலைவணங்காத வீரம்.
பல்லாயிரம் வரலாறுகள் பல நூறு புனிதர்கள்.
இன மொழி வேறுபட்டாலும் இந்தியன் என்ற
அடைமொழியே தேசிய அடைமொழி இங்கே..
விளைச்சாலும் விளைநிலமும் சாமி இந்த பூமியில்
செடியும் கொடியும் மரமும் வீட்டின் உறுப்பினர்.

தாயகம் காக்கும் எல்லை வீரன்
ஊரின் எல்லையில் சுடலை வீரன்
விருந்தாளிக்கு தலைவாழை விருந்து
தலை சாய்ந்தால் ஊர் கூடி மரியாதை
பண்டிகைக்கு பஞ்சம் இல்லை
கொண்டாட்டத்துக்கு முடிவில்லை
இன்னும் சொல்ல சொன்னால்
கடல் நீரை தான் பேனா மையாக மாற்றவேண்டும்.
மறந்து விடாதே நம் தேசத்தையும் அதன் பெருமையும்
போற்றுங்கள் வளருங்கள் நம் வளத்தை வனத்தை...!

-தங்கம்

எழுதியவர் : தங்கம் (8-Feb-15, 6:18 pm)
பார்வை : 195

மேலே