எச்சப் பலன்
எங்கோ பார்ப்பதாய்
அங்கம் பாயும் பார்வை ...
படியேரச் சொன்னவர் கடமையைப்
பாங்குடனே அனுசரிப்பதாய்
பக்கம் நெருங்கும் பாதம் ...
தடதடக்கும் பயணத்தில்
தடுமாறிப் பிடிப்பதாய்
தடம்மாறி விரலுரசும் பிடி ...
சாலைச் சமாளிப்பின்
சாரதியின் சங்கடத்தை
சாதகமாக்கி மேலே சாயும் மேனி ...
வெட்கங்கெட்டவனே
வெளியே பார் ...
அடுத்தொரு பேருந்தில்
உன் தமக்கை ...
தள்ளியொரு பேருந்தில்
உன் தாரம் ...
பின்னாலொரு பேருந்தில்
நீ பெற்ற தங்க மகள் ...
உமிழ்ந்து கொண்டிருக்கிரார்கள்
உன்னை !
*10-Feb-14