பெண்ணாய் பிறந்ததில் பேருவகை கொள்கிறேன்

பிறந்தேன் நானும் பெண்ணாக
மகிழ்ந்தேன் மனதால் அழகாக

ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னரும்.......
உலகில் ஆண் இனம்
உள்ளதென்பேன்..........

அப்பா,
அண்ணன், நண்பன்
தம்பி, தாத்தா, கணவன், மகன் என........என்

ஒவ்வொரு வெற்றிக்கும்
ஒவ்வொருவர் துணையாவர்

அதனால் அன்று
காந்தி சொன்னது போல்
நடு இரவில் பயமின்றி
சாலையில் தனியாக நடந்திடுவேன்........

பூத்த என் வாழ்க்கை
பூரண சுதந்திரத்தோடு இருக்கும்........

என்ற எதிர்பார்ப்பில் வளர்கிறேன்.......

( அம்மா.....என் கண்ணில் படக் கூடாது என அந்த நியூஸ் பேப்பரை மறைக்கிறாள்.......அவளுக்குத் தெரியாது நான் ஏற்கனவே அந்த ஆறு வயசு சிறுமிக்கு ஆன கொடுமையை படித்து அழுது விட்டேன் என்று.......)

எழுதியவர் : வசந்தா (11-Feb-15, 5:59 pm)
பார்வை : 113

மேலே