மரணத்திற்குச் சற்றுமுன்

அந்தக் கடைசித்
தேர்வையாவது
படித்துவிட்டு எழுதியிருக்கலாம்...
எப்படிப் பதறியிருப்பார்
அப்பா.. ரொக்கமாய்
என்னிடம் தொலைத்திருந்த
வெற்றுப் பைகள் துழாவி....
காதல் மறுத்துச்
சென்றதற்காய் அவளை
அறைந்திருக்கக் கூடாது...
ஆயிரம் கேட்டிருந்த
நண்பனுக்கு ஒரு
ஐநூறாவது
கொடுத்தனுப்பியிருக்கலாம்...
என்கூடவே இருந்திருந்தால்
இன்னும் சிலவருடம்
உயிர்த்திருந்திருப்பாளோ
அம்மா...
சில நிமிடங்களிலேயே
மரணித்து விடுகிறார்கள்
மனிதர்கள்....