வாராயோ

நிஜம் பேசி நெஞ்சம் தாக்கி
நிகழ்காலம் வென்ற பெண்ணே...
கன்னத்தில் குழிகள் கொண்டு
களவாட வந்த பெண்ணே..
உனை பார்க்கும் எந்தன் கண்கள்
இமைமூட மறுக்கும் வேளை...
நிமிடத்தை யுகங்கள் ஆக்கி
என்னை நீ கடப்பதேனோ...
உணர்வுக்குள் காச்சல் வந்து
உன்னை பார்க்க ஏங்கிடுதே...
உள்ளுக்குள் காதல் கசிய
ஓர பார்வை பார்த்திடு கண்ணே...!!
.....கவிபாரதி.....

எழுதியவர் : கவிபாரதி (12-Feb-15, 1:26 pm)
சேர்த்தது : கவிபாரதி
Tanglish : vaaraayo
பார்வை : 41

மேலே