காதல் வந்தால்

அகத்தில் எப்போதும்
சந்தோஷப் பூ பூக்கும்

துக்கம் மறையும்
தூக்கம் இனிக்கும்

பேருந்து பயணம் கூட‌
பேருவகை தரும்

வெய்யிலும் பிடிக்கும்
குளிரும் சூடு கொடுக்கும்

அடிக்கடி உதட்டோரம்
புன்னகை பூக்கும்

பேச்சிலே கூட
கவிதை உதிக்கும்

சிறு குழந்தை போல
ம‌னசு மாறும்

வானவில்லாய் வாழ்க்கை தோன்றும்
மதமும் சாதியும் மெல்ல மறையும்

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (14-Feb-15, 6:30 pm)
Tanglish : kaadhal vanthal
பார்வை : 414

மேலே