காக்கைச் சிறகினிலே ==இன்னும் சற்று நொடிகளில் போட்டிக் கவிதை

நொடிக்குள் மறையும் வாழ்வில்
==நூறு பொய்கள் பேசி
வடிக்கும் முதலைக் கண்ணீர்
==வாய்க்கால், நதியாய் மாறி
துடிப்போ டோடும் போது
==துணிந்து நீச்சல் செய்ய
படித்துக் கொண்ட நந்தலாலா உன்னால்
பாலும் நஞ்சாய் போனதடா நந்தலாலா

சிரித்து பேசிக் கவர்ந்து
==செல்வ மென்னும் வலையை
விரித்து உணர்வை பிடித்து
==விருப்பம் போல கசக்கி
மரித்துப் போகும் வரையில்
==மனதை வாட்டிக் கழுத்தை
நெரித்துக் கொல்லும் நந்தலாலா உன்னால்
நிலவும் களங்கப் பட்டதடா நந்தலாலா

வழிகள் கேட்டு வந்தால்
==வாவா வென்றே அழைத்து
விழியைப் பிடுங்கிக் கொண்டு
==வீதி தன்னில் உள்ள
குழிக்குள் தள்ளி ஆங்கே
==கொதிக்கும் தண்ணீர் ஊற்றிக்
களிக்கும் கொடிய நந்தலாலா உன்னால்
கண்ணில் ரத்தம் வழியுதடா நந்தலாலா

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (15-Feb-15, 10:15 am)
பார்வை : 76

மேலே