காக்கைச் சிறகினிலே - இன்னும் சற்று நொடிகளில் - போட்டிக்கவிதை-ரகு

அலர் தூற்றும்
அதிகாலையில்
துயில் களையும்
தேசத்தில்
கதவில்லாக்
குடிசைக்குள்
கனவுகளைச்
சேமித்து
விழிதிறக்கும்
வறியோரே -
வாழ்விய மதிப்பு
இன்றைய நாளென்று
அறிவில் அறிந்தோர்
நீவீர் அன்றோ !
உழைப்பெனும்
கல்வியதில்
பட்டம் வாங்கிய
பாமரரே !
கொண்டது
காக்கைச் சிறகெனினும்
விழையுது வானம்
வாருங்கள்
தீர்வின் முகவரி
தேடலில்தான் !

எழுதியவர் : அ.ரகு (15-Feb-15, 12:24 pm)
பார்வை : 73

மேலே