காக்கைச் சிறகினிலே - இன்னும் சற்று நொடிகளில் - போட்டிக்கவிதை 

பார்வையால் மட்டுமே வாழ்ந்தேன்
பரிசொன்று கிடைத்தது இன்று
பேசிட வரச்சொன்னாய் நீதான்-நான்
பேசிடா வார்த்தைகளை தேடுகிறேன்

கடல்களிங்கு சங்கமிப்பது தெரியாது
காதலர்கள் என்றால் கண்டிப்பாகவாம்
வாழ்வில் கரைசேர்வதை அறியேன்-நான்
வந்து சேர்ந்துவிட்டேன் கடர்கரையை

முடியாதென்று யாரோ சொன்னார்கள்
முடித்துவிட்டேன் மணலை எண்ணி
நிலவழகி வராதநொடி நெடுநேரம்-நான்
நெருங்கிடுவேன் நட்சத்திரமும் எண்ணி

காக்கைகளை தூது அனுப்பிவிடவா
காத்திருப்பதை உனக்கு அறிவித்திட
இன்றேனும் செல்லமே வந்துவிடு-நீ
இவனுக்கொரு நல்லபதில் தந்துவிடு...

படம் : (நேற்று பிடித்தது) நண்பன் கிஷோர்

எழுதியவர் : ப்ரியன் (15-Feb-15, 12:53 pm)
பார்வை : 186

மேலே