மறு முயற்சி

மறு முயற்சி

மரத்தில் ஒடிந்த
சின்ன குச்சி
குஞ்சை தாங்கும் கூடாகலாம்...
குடத்தில் சிதறும் நீரில்கூட,
மேய்ந்த புல்லும்
உயிராகலாம்...
செடியில் உதிர்ந்த
மலரும் கூட,
மாலையில் சேர வரம் பெறலாம்...
உழைப்பில் உதிர்ந்த உதிரம் கொண்டு
வரலாறு தனில் நீ வலம் வரலாம்...

எழுதியவர் : குருமுருகன் (16-Feb-15, 3:02 pm)
சேர்த்தது : குருமுருகன்
Tanglish : maru muyarchi
பார்வை : 168

மேலே