காதலர் தினம்
எனக்குத் தாகமாக இருக்கிறது
தண்ணீர் வேண்டும்.
எனக்குக் காமமாக இருக்கிறது
காதல் வேண்டும்.
உலகில் சொல்லப்பட்ட பெரும்பொய்
”உன்னை நான் காதலிக்கிறேன்”
உலகில் மறைக்கப்பட்ட பெரும்”மெய்”
உன்னை நான் காமமிக்கிறேன்
உள்ளுக்குள் ஏதோ நடப்பதை
காதல் என்றால் அது நியாயம்
வெளியில் ஏதேதோ நடப்பதை
காதல் என்றால் அது நியாயமா?
கடற்கரைகள், பின் ஆசனங்கள்
பூங்காக்கள் பொது இடங்கள்
இன்னும் வயதுக்கே வராத
சோடிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
காதலென்ற பெயரில் கள்ள உறவுகள்
பகிரங்கமாகச் சுற்றித் திரிய
சட்டபூர்வமான திருமண உறவுகள்
வீடுகட்டி பதுங்கி வாழ்கின்றன
காசு கொடுத்து மறைவான அறைக்குள்
தெரியாமல் செய்தால் விபச்சாரமாம்
பரிசு கொடுத்து பொதுவான வீதியல்
தெரியும்படி செய்தால் காதலாம்
பொருத்தமான உறவில் மட்டும்தான்
மதிக்கப்படும் உணர்வு இருக்கவேண்டும்
தாய்க்குத்தான் மகனாக இருக்க வேண்டும்
நாய்களுக்கோ கல்லாக இருக்க வேண்டும்