இடையூறுக்கு வருந்துகிறேன் ~~ சந்தோஷ்

பாரதியே ! புதுமைப்பெண்கள்
தலைகுனிந்துதான் இருக்கிறார்கள்.
தொடுதிரையை தடவிக்கொண்டே.

********************************
மகிழ்ச்சியாகவும் இருக்கிறது
நவநாகரிக பெண்கள்
படைப்பாளி என்றாவது
ஆண்வர்க்கத்தை எரிக்கும்போது.
********************************
நிர்வாணப்படும் ஆசையில்
வலியவரும் இளந்தளிர்கள்
போலில்லை முகநூல் எழுத்துகள்.
எப்படியோ மானம் காத்துக்கொள்கிறது.
********************************
இனி திருமணத்திற்கு முன்
மணப்பவரின் ஜாதகம் தேவையில்லை
அவரின் மருத்துவ அறிக்கையும் கூட.
வாட்ஸ் அப் ,முகநூல் சொல்லிவிடும்
அத்துனை லட்சணத்தையும்.
********************************
தயவு செய்து
பூக்களை பறியுங்களேன்.
தலைவிரி கூந்தல்காரிகளுக்கு அல்ல..
கலாச்சார கல்லறைக்கு தேவை.
********************************
சில மன்மதன்களுக்கு
யமாகா , டிஸ்கெவர் போதும்
சில யுவதிகளில்
சில செ.மீ கற்பை களவாட

********************************

இடையூறுக்கு மன்னிக்கவும்.
கவிதை எழுத மறந்துவிட்டேன்.
அவனது கண்ணகியின் கொலுசு
அவனது சீதையின் வீட்டிலெப்படி?
********************************



-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (20-Feb-15, 9:22 am)
பார்வை : 178

மேலே