இது கவிதை அல்ல

அனல் கக்கும் புரட்சியாய் சமூகம்
அரசியல் சகதியை அள்ளும் ஒரு கவிதை
அங்கும்கெனாத படி நிறைந்த இறைவன்
அடுத்தவன் அறை பார்த்து எழுதிய காதல்
மனதில் பூவாசமாய் இயற்கையின் ஒரு பாடல்

எழுதி,எழுதி ஓயப் போகிறேன்.......

அதை படித்து மாறட்டும் சமூகம்
எனது கவியால் திருந்தட்டும் 'உலகம்'
'புதுப்புயல்' எழுத்துருவில் வந்து
வீசட்டும் சமூகமெங்கும் _அதில்
சாகட்டும் சமூகத்தின் 'சாபங்கள்'............

ஆவேசமாய் எழுதினேன் ...........

ஊராட்சி அலுவலகத்தில் ஒரு வேலை
வெற்றிடத்திற்கு வரி கட்ட கேட்டான் லஞ்சம்
என்ன கொடுமையடா?
புத்திக்குள் ஒரு அலசல்
புரட்சியா?பிழைப்பா?
தயங்காமல் தந்தேன் சில நோட்டுகளை...........

எதிர்ப்பட்டாள் ஒரு 'திருநங்கை'
எழுதி,எழுதி தீர்த்த நான்
'சீ' என்று ஒதுங்கினேன் .........

பிஞ்சு குழந்தைக்கு பால் வேண்டும்
'தர்மம் பண்ணுங்க சாமி ' கேட்டது குரல்
இப்ப தான் 'உள்ளே போட்டேன்'
உனக்குமா?
திட்டி விட்டு கடந்தேன் ................

வேகம் பிடித்தேன் 'சொகுசு காரில்'
சாலை விதியா?அது எதிர் வருபவன் விதி
எழுத மட்டும் தெரியும் எனக்கு ...........

கரு தேடி அலைந்து
அடுத்தவன் கருத்தினை விழுங்கி
துப்பினேன் காகிதத்தில்
எனக்கு அது 'கவிதை'..............

எழுத்தாளனே!
இப்படித்தான் நீ என்றால்
உன் எழுத்தாணி கொண்டு என்ன பயன் ?

எழுதிய எழுத்துக்களால்
யாரும்,எதுவும் மாறப் போவதில்லை ............

தந்தைக்கு தோள் கொடுக்கும் நல்ல மகனாக..........மகளாக............
குடும்பத்தை அரவணைக்கும் நல்ல கணவனாக.........மனைவியாக..........
தன் தலைமுறைக்கு எடுத்துக் காட்டாய் நல்ல தந்தையாக .......தாயாக...........
உறவுகளை பேணும் நல்ல சகோதரனாக .......சகோதரியாக..........
சுக ,துக்கங்களை பகிரும் நல்ல தோழனாக.......தோழியாக.......
வியர்வைக்கு தக்க விலைகொடுக்கும் நல்ல முதலாளியாக .............
வரும்படிக்கு தக்க உழைக்கும் நல்ல தொழிலாளியாக ..........

சிந்தனையாளனாக ........
கருத்தாளனாக .............
வாழும் முறை அறிந்தவனாக.............
பண்பாளனாக................





'மனிதனாக ' வாழ்ந்து விட்டு போ.................

அரசியல் சாக்கடை என்று அலறாதே............
குறைந்த பட்சம் நல்ல 'குடி மகனாய் ' இரு........

உன் பின்னால் வரும் 'ஒரு கூட்டம்'
இவன் தான் 'மனிதன்'
இவன் தான்' தலைவன்'
என்று கொண்டாடும்.............

எழுதியவர் : கௌதமி தமிழரசன் (20-Feb-15, 12:50 pm)
Tanglish : ithu kavithai alla
பார்வை : 351

மேலே