இனியவளே

மனதில் ஏன் இந்த போராட்டம்!!!

என்னுடன் நீ இருந்த ஞாபகங்கள் அசைபோடுகையில்
சந்தோசம் அதிகமாகி பறப்பதைபோல் உணர்கிறேன்
நீ இல்ல நொடிகளில் ஏதோ இழந்ததைபோல் உணர்கிறேன்
சந்தோசம் துக்கம் நாணயமாய் சுழல
இரண்டிற்கும் பொதுவாய் இருவிழிகளிலும் நீர்

பெரியோர் சொன்னது சரிதான்
"கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது"

மனத்தால் உன்னை தாங்கிய நான்
நேற்றுதான் மடியில் உன்கால்களை தாங்கினேன்.

கட்டியணைத்தேன் பாதத்தை
விவரிக்க வார்த்தை இல்லை
பாதத்தால் நீ போட்ட தாளம்
பார்த்து கேட்கவில்லை யாரும்
இந்தநிலை நீளாத ஏங்குகிறேன் நானும்

அணைத்த பாதத்தில் முத்தமிட ஆசை
ஏற்பாயோ? மறுப்பாயோ?
அச்சத்துடன் நான்...

மீண்டும் மீண்டும் வேண்டும் அந்தநிலை
எண்ணி எண்ணி மெய்சிலிர்த்த அந்தநிலை
விவரிக்க வார்த்தை இல்லை
மெல்லிய சிரிப்பில் சிறைபிடிதேன்

நீ மௌனமாக இருந்தாலும்- உன்
வெள்ளி கொலுசு சத்தமிட்டது
கருப்பா கைவிடாதே என்று...

மன்னிப்பு...
ஏன்? எதற்கு?
நீ என்னையும் நான் உன்னையும்
எமாற்றுவாதாக ஒரு என்னமோ!
வேண்டாம்.

மன்னிப்பு கேட்டு அன்னியமாகாதே
ஆழ பிறந்தவன் அழுவது சரியோ!

உன்தாயாக நான்
என்குழந்தையாக நீ
உன்னை சுமப்பது சுகம்தான்
நீயாக என்னை நீங்கும்வரை...

நீங்கினாலும் துயரமில்லை

குழந்தையின் சந்தோசத்துக்கு
தாய் வருந்துவதில்லை

என்றும் உன்சிரிப்பை
எதிரிபார்க்கும் நான்...

...கறுப்பன்...

எழுதியவர் : மகேஷ் (22-Feb-15, 7:33 pm)
Tanglish : iniyavalae
பார்வை : 187

மேலே